விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
வெயில், அங்காடி தெரு, அரவாண் படங்களை இயக்கி வசந்தபாலன் கடைசியாக ஜெயில் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ‛அநீதி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.
‛கைதி, மாஸ்டர்' படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‛சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மாவாக நடித்த துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். வனிதா விஜயகுமார், 'நாடோடிகள்' பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கிநிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குனர்கள் எஸ்.கே. ஜீவா, அருண் வைத்தியநாதன், சுப்பிரமணிய சிவா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இதன் படிப்பிடிப்புகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. படப்பிடிப்பு பிந்தய பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.