இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
2015ம் ஆண்டு வெளியான படம் 'டிமான்டி காலனி'. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருந்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரிக்கிறார் அஜய் ஞானமுத்து. அவரது இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி வேணுகோபால் இயக்குகிறார்.
இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியதாவது: பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் 'டிமான்டி காலனி 2' பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தனர். இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளும் திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின.
அருள்நிதியை அணுகியபோது, அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். என்னை நம்பி எனது இயக்குநர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். என்கிறார் அஜய் ஞானமுத்து.