அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே ரஜினி நடித்த காலா, கபாலி படங்களில் கேங்ஸ்டர் கதையை படமாக்கிறார். இடையில் குத்துச் சண்டை பற்றிய சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய அவர், அடுத்ததாக கமலுடன் இணைந்து மதுரையை கதை களமாக கொண்ட கேங்ஸ்டர் படம் இயக்குகிறார். இதில் கமல் நடிக்கிறார். இதுதவிர விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் மற்றுமொரு கேங்ஸ்டர் கதையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். படத்தின் தலைப்பு வேட்டுவம். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோவுடன் இணைந்து கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.