இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் அதிக படங்களில் நடிப்பவர் மட்டுமல்லாது தயாரிப்பாளர்களின் மினிமம் கேரண்டி நடிகராகவும் விளங்குபவர் நடிகர் ஆசிப் அலி. அன்னயும் ரசூலும், கம்மட்டிபாடம் என விருது படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி தற்போது இயக்கியுள்ள 'குட்டாவும் சிக்ஷையும்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஆசிப் அலி. குறிப்பாக இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
“போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வேண்டும் என இந்த படத்தின் கதையை இயக்குனர் ராஜீவ் ரவி என்னிடம் கூறியதுமே எனக்கு முதன் முதலில் ஞாபகம் வந்தது காக்க காக்க சூர்யாவின் அன்புச்செல்வன் கதாபாத்திரம்தான். துடிப்பும் மிடுக்கும் கலந்த அந்த கதாபாத்திரத்திற்கு அவர் வெகு பொருத்தமாக இருந்தார். நான் பலமுறை பார்த்து ரசித்த அந்த கதாபாத்திரத்தையே இந்த படத்தில் நடிப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார் ஆசிப் அலி