கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் |

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடல் அழகியும், நடிகையுமான சஹான தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த ஈரம் காயும் முன்பே மலையாள படங்களில் நடித்து வந்த திருநங்கை நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். 26 வயதான ஷெலின் ஷெரின் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஏராளமான படங்களில் திருநங்கையாகவும், நாயகன், நாயகியின் தோழியாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கொச்சி சக்கராம்பரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஷெரின் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷெரின் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.