சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

2022ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இந்தியத் திரைப்படப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
திரைப்பட விழாக்கள் என்றாலே நடிகைகள் விதவிதமான உடைகளை அணிந்து வருவது வழக்கம். கிளாமர், கவர்ச்சி, புதுவிதமான டிசைன் என அவர்களின் ஆடைகள் அமையும். பொதுவாக ஹாலிவுட் நடிகைகள்தான் அப்படி அசத்தலாக ஆடை அணிவார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களை வசீகரித்து இந்திய நடிகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாய் விளங்கினார்.
இந்த வருட விழாவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் தினமும் விதவிதமான ஆடைகளை அணிந்து விழாவில் பங்கேற்கிறார்கள். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை தமன்னா அவருடைய வித்தியாசமான ஆடை அணிந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தமன்னாவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது ஆடைகள் அமைந்துள்ளன.