ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தனி ஒருவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். இதில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதுகுறித்து அவர் தனது தெரிவித்திருப்பதாவது: சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் "இரவின் நிழல்" திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன். என்று கூறியுள்ளார்.
கமல் நடித்த விக்ரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், "கமல் நடித்த படத்துடன் என் படமும் கேன்ஸ் விழாவில் திரையிடப்படுவதன் மூலம் நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்" என்று குறிப்பிட்டார். இதே விழாவில் மாதவன் இயக்கிய ராக்கெட்டரி படமும் திரையிடப்படுகிறது.