காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் விக்னேஷ் காந்த். அதன் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். கார்த்தி நடித்த 'தேவ்', ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு', ரியோ நடித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ்காந்த் "நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. திருமணத்துக்கு அனைவரையும் அழைப்பேன். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மணப்பெண் யார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. நட்பு வட்டாரத்தில் விசாரித்த வகையில் உறவுக்கார பெண் என்று தெரிகிறது.