ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் அந்தப் படமும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சசிகுமார் இயக்க இருக்கும் தொடரில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி உருவாகிறது. இதனை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார்.
இதற்கிடையில் குற்றப்பரம்பரை என்கிற பெயரில் இன்னொரு கதையை பாரதிராஜா வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் பாலா இப்படியான ஒரு முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.