'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்தப்படத்தில் ஹிந்தி நடிகை ஒருவர் தான் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அசுரன் படத்தில் நடித்த மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அஜித் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார் மஞ்சுவாரியர்.
அதோடு இந்த படம் அனைவரையும் கவரக்கூடிய ஒரு நல்ல கதையில் உருவாகிறது. அதோடு எனக்கான கேரக்டர் மிகவும் பிடித்திருந்ததால் உடனே படத்தில் கமிட்டாகி விட்டேன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்த அசுரன் படம் எனக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது போலவே அஜித்தின் 61வது படத்தின் எனது கேரக்டர் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கக் கூடிய அழுத்தமான கதாபாத்திரம் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மஞ்சுவாரியர்.