பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கத்திமேல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை இன்றைய இளம் ரசிகர்கள் ரசிக்கும்படியாக கொடுத்ததில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார் நடிகை சிம்ரன். இதுபற்றி அவர் கூறும்போது, “விக்னேஷ் சிவன் மீண்டும் சாதித்திருக்கிறார்.. ஒரு சிக்கலான கதையை சரியான விதத்தில் கொடுத்திருக்கிறார்.. விக்னேஷ் சிவனால் மட்டுமே இது முடியும்.. ஒரு முழுநீள பொழுதுபோக்கு படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.. விக்னேஷ் சிவனுக்கும் அவரது குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார் சிம்ரன்.