'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் வரிசையில் 7வது பாகமாக வரும் அடுத்த படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாம் குரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்' வரிசை படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த வகை படங்களும் வசூலை குவிக்கும். இதுவரை 6 பாகங்கள் வெளிவந்துள்ளது. தற்போது 7வது பாகம் தயாராகி வருகிறது. படத்துக்கு 'மிஷன் இம்பாசிபிள் : டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்' (Mission: Impossible - Dead Reckoning Part One)என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தை, அடுத்த வருடம் ஜூலை மாதம் 14ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டாம் குரூஸுடன் விங் ராமஸ், சைமன் பெக், ரெபக்கா பெர்குசன் உட்பட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் மேக்குயர்ரி இயக்கியுள்ளார். அவர் இயக்கும் மூன்றாவது, மிஷன் இம்பாசிபிள் வரிசை படம் இது.