பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
ராக்கி படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. முதன் முறையாக இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக மாறியுள்ளதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது..
ஆனால் ஏ சான்றிதழ் வழங்கியது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தில் பல காட்சிகளை சென்சாரில் வெட்ட சொல்லிவிட்டார்கள் என்பதற்காக தான் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் சென்சார் இந்த செயலுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏற்கனவே ட்ரெய்லரில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்ட காட்சி படத்தில் இருக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம்.. அது வெறும் டைரக்டர் கட் ஆகவே போய்விடும்” என்று கூறியுள்ளார்.