கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சுப்ராநேஷனல் அழகிப் பட்டத்தையும், அதன்பின் மிஸ் சுப்ராநேஷனல் 2016 அழகிப் பட்டத்தையும் வென்றவர். துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஸ்ரீநிதி. பெங்களூருவில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை முடித்தவர். அதற்குப் பிறகு 'கேஜிஎப்' முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது தமிழில் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையை மாற்றியவர் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கை என்றென்றும் மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த்,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.