பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரு கார்பீல்ட். பாய் ஏ, லயன்ஸ் பார் லாம்ப்ஸ் படங்களில் நடித்த அவர் பின்பு ஸ்பைடர் மேன் ஆனார். தி அமேஸிங் ஸ்பைடர்-மேன், அமேஸிங் ஸைபடர்-மேன் 2, ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றார். இதுதவிர 99 ஹோம்ஸ், டிக், டிக்...பூம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அண்டர் த பேனர் ஆப் ஹெவன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தான் நடிப்பில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கப் போகிறேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்; நான் யாராக இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய இருக்கிறேன். சிறிது காலம் சாதாரணமான மனிதனாக இருக்க விரும்புகிறேன். என்று அவர் கூறியிருக்கிறார்.