50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பா. விஜய் எழுதிய ஆதிரா என்ற சிங்கிள் பாடலின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.