மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் |

2009ல் வெண்ணிலா கபடி குழு மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ராட்சசன் படம் மூலம் அதிக அளவில் ரசிகர்களை சம்பாதித்தார். அதற்கடுத்ததாக அவரது படங்கள் மீது ஓரளவு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது அதனால் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் நேரடி தொடர்பில் இருந்து வந்த விஷ்ணு விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய படங்களை பற்றியும் தன்னுடைய சொந்த விஷயங்களை பற்றியும் அவ்வப்போது அப்டேட் செய்து வந்தார்.
ஆனால் தற்போது கொஞ்ச காலத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.. வாழ்க்கைக்கு ஒய்வு ரொம்ப முக்கியம் என அவர் இதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் சமீபகாலமாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி கொடுத்த மோசடி புகாரும் அதுதொடர்பாக சோசியல் மீடியாவில் அவரிடம் எழுப்பப்படும் கேள்விகளும், பதிவிடப்படும் கருத்துக்களும் அவருக்கு தேவையில்லாத சங்கடத்தையும், மன உளைச்சலையும் கொடுத்திருப்பதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.