மூக்குத்தி அம்மன் 2 துவக்க விழா : மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களை காக்க வைத்த நயன்தாரா | டிவியை தொடர்ந்து ஓடிடியிலும் 'மார்கோ' ஒளிபரப்ப தடை? | மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் தற்காலிக தள்ளிவைப்பு | கடைசிவரை முரட்டு சிங்கிள் தான் - எதிர்நீச்சல் பார்வதி | 'லூசிபர்' ரீ ரிலீஸ்; ரசிகர்கள் மீது இரட்டிப்பு சுமை ஏற்றும் 'எம்புரான்' | பின் வாங்கியது 'அஸ்திரம்' : நாளை 8 படங்கள் ரிலீஸ் | சஞ்சீவ் விஷயத்தில் நான் அப்படி செய்திருக்க கூடாது - ஸ்ரீ வருத்தம் | கல்பனா தற்கொலை முயற்சியா? : மகள் விளக்கம் | இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் |
பசங்க படத்தின் மூலம் அறிமுகமான விமலை முன்னணி நாயகனாக உயர்த்திய படம் களவாணி. 2010ம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. இதன் இரண்டாம் பாகம் 2019ம் ஆண்டு வெளிவந்தது. முதல் பாகம் வெற்றி அடைந்தது, இரண்டாவது பாகம் தோல்வி அடைந்தது. இந்த இரண்டாம் பாகம் தயாரித்த வகையில் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக பெரவள்ளூரை சேர்ந்த கோபி என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: நான் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 2016ம் ஆண்ட ஏப்ரல் 12ம் தேதி நடிகர் விமல் என்னை அணுகி 'மன்னர் வகையறா' என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு பணம் கொடுத்து உதவும்படியும் கோரினார். மேலும், படத்தின் லாபத்திற்கான பங்கையும் கொடுப்பதாக உறுதி அளித்தார்.
அதற்கு நான், சற்று தயங்கியதும், 'களவாணி-2' படத்தை எங்கள் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்தார். அதன் பேரில் நான் அவருக்கு வங்கி கணக்கிலும், ரொக்கமாகவும் ரூ.5 கோடி கொடுத்தேன். வாங்கிய பணத்தை படம் வெளியீட்டுக்கு முன்பே கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை.
பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பிறகு 1.30 கோடியை எனது வங்கி கணக்கில் செலுத்தினார். இதனை படத்திற்கான லாபத்தொகையாக எடுத்துக் கொள்ளுங்கள் அசல் 5 கோடியை பிறகு திருப்பி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்ப வந்துவிட்டது.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பிறகு நடிகர் விமல் எங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.3 கோடி தருவதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால் சொன்னபடி ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கை மோசடி மூலம் ரூ.5 கோடி மோசடி செய்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கோபி தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.