லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் தற்போது நாக சைதன்யாவுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.
நாக சைதன்யா சொகுசு காரில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பயணம் செய்தார். அவரது காரை வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். காருக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத அளவிற்கு கண்ணாடியில் கருப்பு ஸடிக்கர் ஒட்டியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நாக சைதன்யா காரில் அப்படியான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த ஸ்டிக்கரை நீக்கிய போலீசார். நாக சைதன்யாவுக்கு 715 ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனை கட்டிவிட்டு சென்றார் நாக சைதன்யா. அல்லு அர்ஜூன், மஞ்சு மனோஜ் ஆகியோருக்கும் இதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.