துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ' நானே வருவேன் '. இந்துஜா, எல்லி அர்வம் நடிக்கும் இந்த படத்தை தாணு தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. காரில் ஒன்றில் உற்சாகமாக படுத்தப்படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை பகிர்ந்து நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவடைந்தது என தெரிவித்துள்ளார் தனுஷ்.
இதையடுத்து தனுஷின் அடுத்த நேரடி தெலுங்கு படமான "வாத்தி '' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்க உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்க உள்ளார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.