நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று(ஏப்., 11) காலை பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட 24 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ளார். நடிகையாக இருந்த இவர் இன்று அமைச்சராக உயர்வு பெற்றுள்ளார்.