ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஒரு மாநில மொழித் திரைப்படத்தைப் பார்த்து ஒரு ஹிந்தித் திரைப்படம் பின் வாங்கியிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான். யஷ் நடித்த 'கேஜிஎப் 2' கன்னடப் படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி இந்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அதே தினத்தில் ஷாகித் கபூர் நடித்த 'ஜெர்ஸி' ஹிந்திப் படத்தையும் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், 'கேஜிஎப் 2' படத்திற்கு வட இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு மிகவும் அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அந்தப் படத்துடன் ஏன் போட்டி போட வேண்டும் என தங்கள் படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளது 'ஜெர்ஸி' குழு.
நேற்று இரவு இது பற்றிய திடீர் முடிவை தயாரிப்புக் குழுவினர் எடுத்துள்ளனர். இரண்டு படங்களின் டிரைலர்களை வைத்தே எந்தப் படத்திற்கு அமோக ஆதரவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 'ஜெர்ஸி' பட டிரைலர் 65 மில்லியன் பார்வைகளையும், 'கேஜிஎப் 2' டிரைலர் 85 மில்லியன் பார்வைகளையும் யு டியூபில் இதுவரை கடந்துள்ளது.
'கேஜிஎப் 2' படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் சிறப்பாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.