ராமோஜிராவ் பிலிம் சிட்டி குடும்பம் குழந்தைகளுடன் தங்குவதற்கு பாதுகாப்பானது ; நடிகை கஜோல் திடீர் பல்டி | 3 ஆயிரம் கோடியில் மகாபாரத படம் : சரத்குமார் புது தகவல் | பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த நடிகர் | பணமும் தராமல் பெயரையும் கெடுத்து விட்டனர் ; நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குமுறல் | ஒரே நேர ரிலீஸ் திட்டத்தில் தெலுங்கு திரிஷ்யம்-3யும் இணைகிறது ; ஜீத்து ஜோசப் சூசக தகவல் | புதிய படத்தில் ஜோடியாக மாறிய பிரேமலு நண்பர்கள் | மீண்டும் போட்டியிட மறுப்பு ; பொதுக்குழுவில் ஏமாற்றம் தந்த மோகன்லால் | 'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் |
வினோத் இயக்கத்தில், அஜித் நாயகனாக நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கில் நாயகனாக நடிக்கும் கார்த்திகேயா. அஜித் படத்தின் வில்லன் என்பதால் அவரும் நடிக்க சம்மதித்தார்.
படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்தில் நடித்த கார்த்திகேயாவுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. படம் முழுவதும் அஜித்தே இருந்ததாலும், வில்லன் கதாபாத்திரம் அழுத்தமாக சித்தரிக்கப்படாததாலும் கார்த்திகேயாவில் வில்லனாக பெயர் பெற முடியவில்லை.
தெலுங்கில் ஏற்கெனவே சில வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்த கார்த்திகேயா மீண்டும் அங்கு நாயகனாக நடிக்கப் போய்விட்டார். நேற்று அவருடைய 8வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரசாந்த் ரெட்டி இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.