வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் பான்-இந்தியா படமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளியானது. 900 கோடி வசூலைக் கடந்து தற்போது 1000 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நிஜாம் ஏரியா வெளியீட்டு உரிமையை வாங்கிய தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு நேற்று ஐதராபாத்தில் பார்ட்டி ஒன்றை வைத்தார். விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நேற்று நடந்த பார்ட்டியில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தங்களது மனைவிகளுடன் கலந்து கொண்டனர். இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அது மட்டுமல்ல படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'நாட்டு நாட்டு' பாடலுக்காக அவர் நடனமாடினார். பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் அவரது நடனத்தைப் பார்த்து கரகோஷம் செய்தார்களாம்.
'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்குத் திரையுலகத்தில் மீண்டும் ஒரு பெரிய, பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். தெலுங்கு சினிமாவின் தரத்தை மேலும் உயர்த்தி விட்டார் ராஜமவுலி என நேற்று பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள்.