ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஆர்யா, இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‛கேப்டன்'. ஐஸ்வர்ய லட்சுமி, சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க, இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ஹாலிவுட்டில் அர்ணால்ட் நடிப்பில் வெளியான ‛பிரடேட்டர்' பட பாணியில் ஆர்யா இருக்க, அவரது பின்னணியில் ஒரு வித்தியாமான விலங்கு ஒன்று உள்ளது. இதை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது.
“கேப்டன்" திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீபிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யாவின் முந்தைய படங்களான சார்ப்பட்டா பரம்பரை மற்றும் டெடி ஆகியவை பெரும் வெற்றி பெற்றதால் 'கேப்டன்' படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.