ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‛வலிமை' திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு திருப்தியை அளித்து உள்ளது என்றாலும் வெகுஜன ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்றே கருதப்படுகிறது. இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் அஜித் படத்தை இயக்குகிறார் இயக்குனர் வினோத். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இந்தப்படத்தில் இணைந்துள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
வலிமை படத்தை போல அல்லாமல் புதுமாதிரியான சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற இருக்கிறதாம். வலிமை படத்தில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார். அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்தது.. ஆனால் அஜித் 61 படத்தில் பணியாற்ற இவரால் கால்ஷீட் கொடுக்க முடியில்லையாம். அதனால் தான் இந்த படத்தில் வேறுவிதமான சண்டைக் காட்சிகளை வடிவமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சண்டை பயிற்சியாளரை தற்போது மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.