'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . இதற்கிடையே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் . வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார் .
இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தில் தனுஷ் , இயக்குனர் கஸ்தூரி ராஜா , விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர் . நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் சமூகவலைத்தளத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது .