தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் விஜய் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் படம் ‛பீஸ்ட்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், ரெடின்கிங்ஸ்லி, அபர்ணாதாஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர்கள் மூலம் படக்குழு அறிவித்தனர். அந்த போஸ்டரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 3 மொழிகளிலும் இந்த படத்தின் பெயர் பீஸ்ட் என்றே அந்தந்த மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் ஹிந்தி பெயர் மட்டும் 'ரா' என்ற பெயரில் எழுதப்பட்டு இருந்தது . 'ரா ' என்பது இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த பெயர் மூலம் நடிகர் விஜய் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் இருந்து பீஸ்ட் அன்சீன் ஸ்டில்ஸ் என பீஸ்ட் பட போட்டோவை வெளியிட்டுள்ளனர். இது வைரல் ஆனது.