கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
லிங்குசாமி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‛தி வாரியர்'. நாயகனாக ராம் பொதினேனியும், நாயகியாக கிர்த்தி ஷெட்டியும், வில்லனாக ஆதியும் நடிக்கின்றனர். அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகும் இப்படத்தில் ராம் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இறுதிக்கட்டத்தில் படம் உள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
இது தொடர்பாக ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் ராம் பொதினேனி ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில், வெடிபொருட்கள் அடங்கிய பெட்டியின் மீது, கையில் காயத்துடன், அமர்ந்திருக்கிறார். கோபமான முகத்துடன் துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் குண்டர்கள் கூட்டம் அவரை கண்டு ஓடுவதைக் காணலாம்.
'இந்த படம் எதிர்பார்ப்புகளை விஞ்சி, தென்னிந்திய சினிமாவின் மறக்கமுடியாத போலீஸ் கதைகளில் ஒன்றாக இருக்கும்' என்று கூறியுள்ளனர். ராம் பொதினேனியின் இஸ்மார்ட் ஷங்கரின் வெற்றிக்குப் பிறகு 'தி வாரியர்' வருவது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.