ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு, சிரஞ்சீவியுடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், “சிரஞ்சீவியை எப்போது சந்தித்தாலும் மகிழ்ச்சி தான்.. அந்த அளவுக்கு அன்பான பண்பான நட்பான ஒரு மனிதர்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி நடித்து வரும் காட்பாதர் படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. கடந்த 2006-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக குஷ்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.