போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… |
30 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படமான ராசுக்குட்டியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா. நடிகை லட்சுமியின் மகள். தற்போது இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்குகிறார். முதல் நீ முடிவும் நீ' படப்புகழ் ஹரிஷ், 'வாழ்' படப்புகழ் பிரதீப் ஆண்டனி உள்பட பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறர், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். ரொமான்ஸ், காமெடி, நிறைந்த இதன் படப்பிடிப்பு, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.