பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பான்--இந்தியா என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாக வருகிறது என்று நடிகர் துல்கர் சல்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். அந்த அளவிற்கு பான்--இந்தியா படங்கள் என்று சொல்லிக் கொண்டு சில படங்கள் 'பந்தா' பண்ணிக் கொண்டிருந்தன. அதை அப்படியே சரித்த பெருமை 'ராதேஷ்யாம்' படத்திற்கு உண்டு.
சுமார் 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'ராதேஷ்யாம்' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு மார்ச் 11ம் தேதி வெளியானது. படத்தில் கை ரேகை பார்க்கும் நிபுணர் ஆக நடித்திருக்கும் பிரபாஸ் தான் 'பாகுபலி' படங்கள் மூலம் இந்த பான்--இந்தியாவை பிரபலப்படுத்தியவர். அவருக்கே படத்தைப் பார்த்து படம் ஓடாது என்று ஜோசியம் சொல்லிவிட்டனர் ரசிகர்கள்.
படத்தைத் தயாரித்த நிறுவனமும் 100 கோடி, 150 கோடி, 200 கோடி வசூல் என சொல்லி வந்தது. ஒரு படி மேலே போய் தியேட்டர்கள் மூலம் வசூல் 200 கோடி, மற்ற உரிமைகள் மூலம் 200 கோடி வருவாய், ஆக மொத்தம் 400 கோடி என்றும் கூட சொன்னார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகத்திலிருந்தே படம் 100 கோடிக்கு மேல் நஷ்டத்தைத் தரும் என்ற தகவலும் வெளிவந்தது.
நாளை 'ஆர்ஆர்ஆர்' படம் பிரம்மாண்டமாக வெளியாவதால் 'ராதேஷ்யாம்' படத்தின் ஓட்டம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. தமிழில் இப்படத்தின் வசூல் ஒரு கோடியைக் கூடத் தாண்டவில்லை என்று அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்கள். ஹிந்தியில் 20 கோடியைக் கூடத் தாண்டிவில்லை என்றும் சொல்கிறார்கள். இனி, பான்--இந்தியா என்று சொல்வதற்கே சில ஹீரோக்கள் பயப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.