'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.. அதன்பின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக மாறிய இவர் தமிழ், மலையாள, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார். அந்த வகையில் கடந்த 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக ஆடம் ஜான் என்கிற படத்தில் இணைந்து நடித்தார் பாவனா.
அந்த சமயத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிய அவர் அதன்பிறகு பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆனதுடன் கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்த நிலையில் 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் பாவனா. படத்திற்கு 'என்திக்காக்காகொரு பிரேமந்தார்னு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்முட்டி, பாவனா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை அடில் மைமூநாத் அஷ்ரப் என்பவர் இயக்குகிறார்.