ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா. தமிழில் சத்யம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். உபேந்திரா நடிகர் மட்டுமல்லாது பாடகர் மற்றும் இயக்குனர். 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய உபேந்திரா கடைசியாக உப்பி 2 என்ற படத்தை இயக்கினார்.
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இது இந்திய மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய இசை நிறுவனமான லஹரி நிறுவனம் லஹரி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக உபேந்திரா படத்தை தயாரிக்கிறது. உபேந்திரா படத்தை இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார். கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 4 இந்திய மொழிகளில் பான்-இந்திய திரைப்படத்தினை உருவாக்கவுள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள உபேந்திரா படம் பற்றி கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பான்-இந்தியன் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி. சிந்தனையைத் தூண்டும் வகையிலான சினிமா அனுபவத்தை ஒட்டுமொத்த இந்தியப் பார்வையாளர்களும் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்.
உபேந்திரா என்ற சகாப்தத்தை உருவாக்கியதே ரசிகர்கள் தான், 33 வருடங்களாக திரைக்கதை வசனம் எழுதிய ரசிகர்களின், விசில் மற்றும் கிளாப்ஸ் மூலம் தான் நான் எப்போதும் இயங்கி வருகிறேன். இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன். என்கிறார்.