Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன் செல்வராகவனை கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய தனுஷ்!

11 மார், 2022 - 05:06 IST
எழுத்தின் அளவு:
Dhanush-hugs-brother-Selvaraghavan-and-poses-for-a-pic-on-the-sets-of-Naane-Varuven

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டிருந்தார் செல்வராகவன்.

மேலும், நேற்றைய தினம் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ் தன்னை பாசத்துடன் கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றையும் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்தது போல் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ்!சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ்! மறைந்த ரசிகர் முத்துமணி குடும்பத்திற்கு ரஜினி ஆறுதல் மறைந்த ரசிகர் முத்துமணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)