நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் வெளியாகவுள்ளது. சென்னையில் இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதையடுத்து ஐதராபாத்திலும் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் தெலுங்கு நடிகர் ராணா, தெலுங்கு இயக்குனர் பொய்யா பட்டி ஸ்ரீனு உள்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பொய்யா பட்டி ஸ்ரீனு, சூர்யாவின் படங்களை தெலுங்கு மக்கள் தமிழ் படம் போன்று நினைப்பதில்லை. தெலுங்கு படமாகவே நினைத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு சூர்யா படத்துக்கு தான் அதிகப்படியான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்று பேசியுள்ளார்.
அதோடு பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது. ஆனபோதும் அதற்கு முந்தின நாளில் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகப்படியான திரையரங்குகளில் சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படமும் வெளியாக உள்ளது.