போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழில் டிவி தொடர்களில் நடித்திருந்தாலும், 'பிக் பாஸ்' சீசன் 4ன் மூலம் அதிகப் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன். பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர்.
இதனால், அவரைத் தேடி தற்போது பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இதற்கடுத்து பொன்ராஜ் இயக்கும் படம், ஆர்ஜே பாலாஜி இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
அடுத்து வடிவேலு நாயகனாக நடிக்க சுராஜ் இயக்கி வரும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திலும் நடிக்கிறாராம் ஷிவானி. வடிவேலுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “எனது மீம்ஸ் மற்றும் டிரோல்களை அவரது படங்களுடன் பார்ப்பதில் இருந்து அவருடன் சினிமாவில் நடிப்பது வரை… சாதனை நடிகர் வடிவேலு அவர்களுடன் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.