அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், வினோத் இயக்கத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ள படம் 'வலிமை'. இப்படம் தமிழகத்தில் தனிப்பெரும் திரைப்படமாக வெளியாக உள்ளது. போட்டிக்கு இங்கு வேறு படங்கள் எதுவும் இல்லை. படத்தைத் தமிழைத் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.
பொதுவாக அஜித் படங்களுக்கு மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததில்லை. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா வில்லனாக நடிப்பதாலும், ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருப்பதாலும் தெலுங்கு, ஹிந்தி மார்க்கெட்டில் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கர்நாடகா, கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் எந்த போட்டியும் இல்லாமல் படம் வெளியாகிறது.
ஆனால், தெலுங்கு, ஹிந்தியில் 'வலிமை' படத்திற்குப் போட்டியாக இரு படங்கள் உள்ளன. தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள 'பீம்லா நாயக்', ஹிந்தியில் ஆலியா பட் நடித்துள்ள 'கங்குபாய் கத்தியவாடி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களுக்குத்தான் அவர்கள் முன்னிலை கொடுத்து அதிக தியேட்டர்களைக் கொடுத்துள்ளார்களாம். அதனால், ஆந்திரா, தெலங்கானா, வட இந்தியாவில் 'வலிமை' படம் குறைவான தியேட்டர்களில்தான் வெளியாகிறதாம். படம் நன்றாக இருந்தால் அப்படங்களை மீறி 'வலிமை' வசூல் சாதனை புரிய வாய்ப்புள்ளது.