ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே |
உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித்குமாரின் 'வலிமை' படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதுமே 'வலிமை' படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது.
அஜித்குமாரின் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம் மற்றும் காட்சி துணுக்குகளில் இருந்த அதிரடி ஆக்சன் ஆகியவை படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் அஜித்குமாரின் பிரமாண்ட துவக்கமாக இருக்குமென தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அஜித் குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
அஜித்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட போனி கபூர், ‛‛அஜித் மிகவும் அடக்கமான நடிகர், ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. படத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார்.
'வலிமை' படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட், அவர் தனது பார்வையை அடைய எந்தக் எல்லைக்கும் செல்வார், ஆனால் தயாரிப்பாளர் உடன் மிகுந்த நட்புடன் இருப்பார். இந்த கடினமான சவாலான தொற்றுநோய் கால கட்டத்தில் வலிமை படத்தினை முடிக்க, ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர் அவர்களுக்கு நன்றி''. இவ்வாறு கூறினார்.
வலிமை படத்தினை நேரடியாக ஓடிடி.,யில் வெளியிட பல முன்னணி தளங்கள் பெரும் தொகையுடன் போட்டியிட்ட போதிலும், போனி கபூர் அதனை முழுவதுமாக தவிர்த்துவிட்டார். அவர் கூறும்போது, “வலிமை ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை திறந்துள்ளன, ஆனால் “வலிமை” போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது. இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும்'' என்றார்.
அஜித்குமார் நடித்திருக்கும் "வலிமை" வரும் பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது.