ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் |
பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் இந்தபடம் ஆக்சன் எண்டர்டெய்னராக உருவாகிறது. சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை.
இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் 'மாஸ்டர்' மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.