‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இந்த 2022ம் வருடம் அனிருத்தின் வருடம் என்று சொல்லுமளவிற்கு சில பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அடுத்த சில மாதங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ள முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்தப் படங்களின் பாடல்கள் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியும் உள்ளன. அந்தப் பாடல்கள் 3 கோடி பார்வைகளை யு டியூபில் பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து ஏப்ரல் 28ல் வெளிவர உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் அனிருத் இசையமைத்துள்ள 'டூ டூ டூ' பாடல் யு டியூபில் 38 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்து மார்ச் 25ல் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'டான்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்றுள்ள 'ஜலபுல ஜங்கு' பாடல் 34 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இரண்டு நாட்களுக்குள்ளாகவே 31 மில்லியன் பார்வைகளை தற்போது கடந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து 3 கோடி பார்வைகளைக் கடந்த பாடல்களைக் கொடுத்துள்ளனார் அனிருத்.




