வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி |
தெலுங்கில் முன்னணி நடிகர் மோகன்பாபு. இவரது மகன் விஷ்னு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் லட்சுமி மஞ்சு தமிழில் கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறியிருப்பதாவது: எனது நீண்டநாள் கனவு இது. எனது முதல் ஹீரோ தந்தையுடன் இணைந்து நடிக்கிறேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடன் இணைந்து நடிப்பது ஒரு பெரிய விருது பெற்றது போல் இருக்கிறது. இந்த நாளுக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தொடர்ந்து முயற்சித்தால் நம் கனவு ஒரு நாள் நனவாகும், என் விஷயத்தில் அது நடந்திருக்கிறது. என்கிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் சித்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறர். பாலிவுட் இயக்குனர் பிரத்திக் பிரஜோஸ் இயக்குகிறார். டைமண்ட் ரத்னபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சாய் பிரகாஷ் இசை அமைக்கிறார். பிரியதர்சன் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறர்கள். இது ஒரு க்ரைம் த்ரில்லர் வகை படம்.