அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

முன்னணி தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு. நடிகர் மோகன்பாவுவின் மகள். தமிழில் கடல், காற்றின் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் விமான பயணத்தின் போது இண்டிகோ விமான நிறுவன பணியாளர்கள் தனது கை பையை பிடுங்கிக் கொண்டு அதை இங்கேயை வைத்துச் செல்லுங்கள் என்று மிகவும் கடினமாக நடந்து கொண்டனர் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எழுதியிருந்தார்
இது குறித்து விமான நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் “நடிகை தனது பையை விமான நிலைய ஊழியர்கள் பிடுங்கிக் கொண்டதாக சொல்கிறார். அவர்கள் சோதனைக்காகவே வாங்கினார்கள். அவர் அதை திறக்க அனுமதிக்கவில்லை. தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லாமல் இருக்க கடுமையான சோதனைகள் செய்யப்படுவது வழக்கமானதுதான். அதற்காகவே நடிகையின் பையை ஊழியர்கள் தடுத்தனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
அதன்பிறகு சோதனை முடிக்கப்பட்ட தனது பொருட்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லட்சுமி மஞ்சு, “எனது வழக்கை முடித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.