ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் 169வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இப்போதுவரை சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதையடுத்து கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், பால்கி போன்றவர்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்தார்கள். நேற்று கூட வெற்றிமாறன் இயக்க போவதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலில் ரஜினியின் 169வது படத்தை விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.