ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தர்மராஜ் பிலிம்ஸ் மற்றும் பியாட் தி லிமிட் கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் படம் என்4. லோகேஷ் குமார் இயக்குகிறார். திவ்யங்க் ஒளிப்பதிவு செய்கிறார், பாலசுப்பிரமணியன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சுந்தரி தொடரில் நடிக்கும் கேப்ரில்லாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வினுஷா தேவியும் கதை நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இருவருமே டிக்டாக் புகழ் மூலம் சின்னத்திரைக்கு வந்து அதன் வழியாக இப்போது பெரிய திரைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை, அபிஷேக் சங்கர், அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் லோகேஷ் குமார் கூறியதாவது: காசிமேடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் குறியீட்டு எண்தான் என்4. அந்த பகுதியில் நடக்கும் கதை என்பதால் இந்த டைட்டிலை வைத்துள்ளோம். இந்த பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகிறது. இதில் கேப்ரில்லாவும், வினுஷா தேவியும் மீனவ பெண்களாக நடித்திருக்கிறார்கள். ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றார்.