அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வீடியோ ஆல்பம் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். சமீபத்தில் இவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் என்கிற திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு அவை பிடிக்காமல் கேட்கும்போதே தான் தூங்கி விட்டதாக கூறினார் அஸ்வின்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவரது பட வெளியீட்டையும் தள்ளி வைக்கும் அளவிற்கு நிலைமை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ள வார்த்தைகள் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
அவரது பதிவில் யார் என பெயர் குறிப்பிடாமல் "என்ன.. , பழிவாங்கறதா..? இல்லை.. நான் ரொம்பவே சோம்பேறி.. அதனால் நான் இங்கேயே தான் உட்கார்ந்திருக்க போகிறேன்.. கர்மா உன்னை.. " என மோசமான ஓரு ஆங்கில வார்த்தையை குறிப்பிட்டு அது என்னவென்று தெரியாதபடி அழித்தும் இருக்கிறார்.. யாரையோ பழிவாங்க விருப்பமில்லாமல் அதே சமயம் அந்த நபர் மீது கோபப்பட்டு இந்த பதிவை அவர் இட்டிருந்தாலும் இவ்வளவு மோசமான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க தேவையில்லை என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.