கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
நடிகர் அஜித்குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள படம் ‛வலிமை'. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததை அடுத்து, தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுஊரடங்கு உள்ளிட்ட காரணங்களுக்காக பட வெளியீட்டை தயாரிப்பாளர் போனி கபூர் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை ரத்து செய்தது. இதனையடுத்து வலிமை படத்தை வெளியிட படக்குழு ஆயத்தமாகியுள்ளது.
'வலிமை' படத்தை பிப்ரவரி 24ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் அதற்குள் திரையரங்குகளில்100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே 'வலிமை' படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி பிப்ரவரி 24 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தயாரிப்பு தரப்பு புதிய வெளியீட்டு தேதியை வெளியிடலாம்.