‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சமீபத்தில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான 'நரை எழுதும் சுயசரிதம்' சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி&கே வாஹினி புரொடக்ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.
பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய 'நரை எழுதும் சுயசரிதம்' திரையுலகினர் உள்ளிட்ட பல தரப்பினரின் பாராட்டுகளை ஏற்கனவே பெற்றுள்ளது. தற்போது ரசிகர்களின் பார்வைக்காக சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்துள்ளது. பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே 'நரை எழுதும் சுயசரிதம்' படத்தின் கதை.




