ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியானது. தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, இந்த புஷ்பா படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அதோடு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ராஷ்மிக்காவுக்கு ஊக்கத்தொகை வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில் புஷ்பா முதல் பாகத்தில் நடிக்க அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்து இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார் ராஷ்மிகா. மேலும், ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகின்றன.