ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
தற்போது சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் வாடிவாசல், அதன் பிறகு விஜய்யின் 68வது படம் என அடுத்தடுத்து வெற்றிமாறன் படங்கள் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் விடுதலை படப்பிடிப்பு முடிந்ததும் சமுத்திரகனி நடித்து வெளியான ரைட்டர் படத்தில் நடித்த ஆண்டனியை வைத்து ஒரு வெப் சீரியலை வெற்றிமாறன் இயக்குவதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை வெப் சீரியலாக எடுக்கப் போவதாக கூறியிருந்தார் வெற்றிமாறன். அதனால் இந்த வெப் சீரியல் வட சென்னையின் இரண்டாம் பாகமா? இல்லை வேறு கதையில் உருவாகிறதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.